டில்லி
வீடு வாங்குவோருக்கும் வங்கி வட்டி விகிதம் இறங்கியதால் துயருறும் முதியவர்களுக்கும் சலுகைகள் வழங்க உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பணப்புழக்கத்தை ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து வருகிறது. அத்துடன் புதிய வீட்டு வசதிக் கடன் வழங்க வேண்டும் என வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வட்டிக்குறைப்பால் பல வங்கிகள் தங்கள் முதலீட்டாளர்களுக்கு அளித்து வந்த வட்டி விகிதத்தை குறித்துள்ளது. நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டார்.
அப்போது நிர்மலா சீதாராமன்,”சமீப காலத்தில் ஐ எல் எஃப் அண்ட் எஸ் நிறுவனம், ஜெட் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்கள் நஷ்டமடைந்து மூடப்பட்டது மிகவும் துயரத்தை அளிக்கிறது. இதை நாம் முன்பே ஊகித்திருக்க வேண்டும் ஆனால் அதற்கு மிகவும் தாமதமாகி விட்டது.
தற்போது பிஎம்சி வங்கி கடும் பிரச்சினையில் உள்ளது. இதை நீக்கக் கூட்டுறவு வங்கிகளுக்குத் தனி விதிகள் உள்ளதை மாற்ற வேண்டும். எனவே வங்கி கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் கொண்டு வரப்பட்டு அவற்றுக்கும் ஒரு சில கட்டுப்பட்டு விதிகள் இயற்றப்பட உள்ளன.
வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டு வசதிக்கடன்கள் அதிக அளவில் கொடுக்க்பட்டு வருகின்றன. அதையொட்டி வீடு வாங்குவோருக்கு ஒரு சில சலுகைகள் வழங்க ஆலோசித்து வருகிறோம் அத்துடன் வங்கிகள் தங்கள் முதலீட்டாளர்களுக்கு வட்டியைக் குறைத்துள்ளதால் துயருறும் முதியோருக் கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க ஆலோசனை நடந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.