டில்லி

ஃபேல் வழக்கில் நீதிமன்றத்தில் பொய் வாக்குமூலம் அளித்த மோடி அரசு மீது விரைவில் வழக்கு தொடரப்படும் என முன்னாள் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவின் முன்னாள் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.   அந்த வழக்கு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் தற்போது மறுசீராய்வு மனு அளிக்க உள்ளது.   இந்த வழக்கில் புதிய ஆவணங்கள் சேர்க்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து யஷ்வந்த் சின்ஹா, “நான் ஏற்கனவே எனது டிவிட்டரில் கூறி இருந்தபடி பிரதமர் மோடியின் அரசு என்பது பொய்களின் அரசு ஆகும்.   அந்த  பொய்கள் தற்போது வெளிவந்துள்ளன.    நான் இந்த உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்கிறேன்.

நாங்கள் முதல் கட்டத்தை ஏற்கனவே கடந்து விட்டோம்.  தற்போது நாங்கள் புதியதாக அளிக்க உள்ள ஆவணங்களின் அடிப்படையில் ரஃபேல் ஒப்பந்தத்தின் பல இனங்கள் குறித்து வாதாட உள்ளோம்.

நான் முன்பும் நம்பிக்கையுடன் இருந்தேன்.  இப்போதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்.  இந்த வழக்கு விசாரணைக்கு தகுதியான ஒர் வழக்காகும்.   பொய்யான தகவல்களை கூறி அராசு நீதிமன்றத்தில் பொய் வாக்குமூலம் அளித்துள்ளது.    நாங்கள் இப்போது அளிக்க உள்ள ஆவணங்கள் மூலம் உண்மை வெளிவரும்.

அரசு பொய் தகவல்கள் அளித்ததை சந்தேகத்துக்கு இடமின்றி தி இந்து நாளிதழ் உறுதி செய்துள்ளது.   இனி அளிக்கப் போகும் ஆவணங்கள் மூலம் நாங்கள் இந்த வழக்கில் ஒரு நல்ல முடிவை அடைய போரிடுவோம்.

நாங்கள் நீதிமன்றத்தில் அரசு பொய் வாக்குமூலம் அளித்ததற்காக தனியாக வழக்கு பதிய உள்ளோம்.   அரசு மீது நீதிமன்றத்தில் பொய் வாக்குமூலம் அளித்து நீதிமன்றத்தை அலைக்கழித்ததற்காக நிச்சயம் வழக்கு நடைபெறும்.  நாங்கள் மறு சீராய்வு மனுவுடன் இந்த பொய் வாக்குமூல வழக்கையும் தொடர உள்ளோம்.” என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளர்.