திருவனந்தபுரம்:  வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, வரும்  23ஆம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முடுன்பு நடைபெற்ற (2024ஆம் ஆண்டு ஜுன்)  மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டு . இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து, ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக் கொண்டு வயநாடு தொகுதியில் இருந்து  ராஜினாமா செய்தார்.  இதையடுத்து வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி அங்கு வேட்புமனுத்தாக்கல் தொடங்கி உள்ளது. வரும் 25ஆம் தேதி கடைசி தேதியாகும். வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசிநாள் அக்டோபர் 30ஆம் தேதி ஆகும்.   வாக்குப்பதிவு நவம்பர் 13-ஆம் தேதியும்,  வாக்குகள் எண்ணிக்கை நவம்பர் 23ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து அங்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது. வயநாடு தொகுதியில்  பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் 23ந்தி பிரியங்கா காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளார்.

முன்னதாக, ஆலப்புழா மக்களவை தொகுதி எம்பியும் மூத்த தலைவருமான கேசி வேணுகோபால்,ஆகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கேரளா பொறுப்பாளர் தீபா தாஸ்முன்ஷி ஆகியோர் வயநாடு மக்களவைத் தொகுதியில் உள்ளூர் தலைவர்களைக் கொண்டு கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி செயல்வீரர் கூட்டத்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 3ஆம் தேதி வயநாடு தொகுதிக்கு உட்பட்ட ஆந்தூர், திருவாம்பாடி பகுதிகளிலும் கூட்டம் நடத்தியுள்ளனர்.  பெரும் அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்காவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று  கேரள காங்கிரசார் வியூகம் வகுத்து வருகின்றனர்.

வயநாடு தொகுதியில், பிரியங்கா காந்திக்கு எதிராக இண்டியா கூட்டணிச் சேர்ந்த கம்யூனிஸ்டு கட்சி மீண்டும் களமிறங்கி உள்ளது. கேரளாவில்  ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சத்யம் மொகேரி போட்டியிடுகிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் ராகுலுக்கு எதிராக கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜாவு போட்டியிட்ட நிலையில், தற்போது,  ஆனி ராஜாவுக்கு பதிலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி  சத்யன் மோக்கேரி  களமிறக்கப்பட்டு உள்ளார். அதே வேளையில் முக்கிய கட்சயின  பாஜக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

சத்யன் மோக்கேரி, கடந்த 2014 மக்களவை தேர்தலில் இதே வயநாடு தொகுதியில் சிபிஐ கட்சி சார்பாக களமிறங்கி 3,56,165 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் M.I.ஷனவாஸ் 3,77,035 வாக்குக்கள் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.