திருவனந்தபுரம்: வயநாடு மக்களவை தொகுதியில்  காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, சகோதரர் ராகுலுடன்  ரோடு ஷோ நடத்தி பேரணியாக சென்று வயநாடு தொகுதியில்  வேட்புமனுவை தாக்கல் செய்தார்.. “இது பொன் எழுத்துக்களில் எழுதப்படும்” காங்கிரஸ் தலைவர்கள் உற்சாகத்தை பகிர்ந்து கொண்டனர்.

2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரே பரேலி என இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற ஏதேனும் ஒரு தொகுதியை அவர் கைவிட வேண்டிய சூழல் உருவானது. இந்நிலையில்தான் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூன் 17 அன்று ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, காலியாக உள்ள வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நவம்பர் 13-ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு காங்கிரஸ் தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி பிரியங்கா காந்தி பெயர் அறிவிக்கப்பட்டது.  அவரை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா ஹாரிதாஸ், இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் சத்யன் மொக்கேரி ஆகியோர் களம் இறக்கப்பட்டு உள்ளனர். இதனால், அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

முன்னதாக,  பிரியங்கா காந்தி நேற்று ததாய் சோனியா காந்தியுடன் கேரளா வந்து சேர்ந்தார். முன்னதாக விமானம் மூலம் மைசூரு வந்த அவர்கள் இருவரும் அங்கிருந்து சாலை மார்க்கமாக கேரளா வந்தடைந்தனர். அவர்களுக்கு காங்கிரசார் வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, இன்று காலை ரோட்ஷோ மூலம்  பேரணிகா சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  வேட்புமனு தாக்கலுக்கு முன் வயநாட்டில் கல்பேட்டா பேருந்து நிலைய பகுதியில் இருந்து வேட்பு மனுத்தாக்கல் செய்யும்  பகுதி வரை பிரமாண்டமான ரோடு ஷோ நடைபெற்றது. அப்போது, ஒரு குழந்தையை வாரி அணைத்த பிரியங்கா, அப்பகுதி மக்களின் ஆதரவை பெற்றார்.

இதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரியங்கா,  தனது சகோதரன்  அன்பு மற்றும் ஒற்றுமைக்காக இந்தியா முழுவதும் 8000 கிமீ நடந்து மக்களின் அன்பை பெற்றார்.   நீங்கள் இல்லாமல் அவரால் அதைச் செய்திருக்க முடியாது. உலகமே என் அண்ணனுக்கு எதிராகத் திரும்பியபோது நீங்கள்  அவனுடன் நின்றீர்கள்,. நீ ங்கள் அவருக்கு . தொடர்ந்து போராடும் உன் பலத்தையும் தைரியத்தையும் கொடுத்தீர்கள். இதற்கு,  என் குடும்பம் முழுவதும் உங்களுக்கு  என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும்.. இந்த தொகுதி மக்களிடையே அவருக்கும் உங்களுக்கும் உள்ள    பந்தத்தை மட்டும் வலுப்படுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன்… நீங்கள்  எதிர்கொள்ளும் பெரிய பிரச்சினை களை அவன் எனக்கு விளக்கினான்… நான் விரும்பும் போராட்டங்களை என் சகோதரன் எனக்கு விளக்கினான் உங்கள் வீட்டிற்கு வந்து, உங்கள் பிரச்சனைகள் என்ன என்பதையும், அவற்றை நாங்கள் எவ்வாறு சமாளிப்பது என்பதையும் உங்களிடமிருந்து நேரடியாக புரிந்துகொள்வேன் என உறுதி அளித்தார்.

இந்த பிரமாண்ட ரோட் ஷோவில் பிரியங்காவுடன்,  அவரது சகோதரரும் மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி, அவரது கணவர் ராபர்ட் வத்ரா மற்றும் அவரது மகன் ரைஹான் ராஜீவ் வத்ரா ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும்,  அவருடன் கட்சித் தலைவர்கள் மற்றும் தமுமுக தலைவர் பி.கே.குன்ஹாலிக்குட்டியும் ரோட்ஷோவில் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, அவர் காங்கிரஸ் தலைவர்களுடன் சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதை காங்கிரஸ் தலைவர்கள் பெருமையுடன் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அதில், “இது பொன் எழுத்துக்களில் எழுதப்படும்” என தெரிவித்துள்ளனர்.