டெல்லி: பிரதமரின் தலைமையின் கீழ் கொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் புகழ்பெற்ற போரின் சிறப்பான தருணம் இது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறி உள்ளார்.

நிபுணர் குழு பரிந்துரையின்படி ஆக்ஸ்போர்டு, சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்டு,பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இதற்கு பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன்  தமது ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: பிரதமரின் தலைசிறந்த தலைமையின் கீழ் கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரில் சிறப்பான தருணம் இதுவாகும். தடுப்பூசிகள் கொரோனா முன்கள வீரர்களுக்கு பொருத்தமான பரிசு.

தடுப்பூசி இல்லாத காலங்களில் பணியாற்றிய அனைத்து சுகாதார வல்லுநர்கள், முன்னணி ஊழியர்களுக்கு மனமார்ந்த நன்றி. அனைத்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களின் அயராத முயற்சிகளுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.