சென்னை:
2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, கன மழை காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இன்னொரு பக்கம் பார்த்தால், மயிலாப்பூர் உட்பட பல ஏரியாக்களில் சாலைகளில், முட்டி வரை தண்ணீர் ஓடிக் கொண்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள்.

நேற்று இரவு முதல் பெய்த கனமழை தான் இதற்கு காரணம். இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவிக்கையில், சென்னை நகரத்தில், 150 மில்லி மீட்டர் முதல் 200 மில்லி மீட்டர் வரை சில மணி நேரத்தில் கொட்டித் தீர்த்துள்ளது மழை. மழை தண்ணீர் வடியும் வரை இன்னும் சில மணிநேரங்களுக்கு தண்ணீர் தேங்கி இருப்பது சகஜம்தான்.

சென்னை மட்டும் கிடையாது எந்த ஒரு நகரமாக இருந்தாலும் இத்தனை அடர்த்தியான மழையை தாக்குப்பிடிப்பது கஷ்டம்.மேலும் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக சென்னை மெரினா கடற்கரையில் மழைநீரால் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் அது பற்றிய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.