சென்னை,

சென்னை மற்றும் சுற்றுவட்டார புறநகர் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக செம்பரப்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் 15 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.  ஏரிக்கான நீர்வரத்தும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும் நிலையில், தற்போது பெய்துவரும் மழை காரணமாக மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

சென்னை மக்களின் தாக்ததை தீர்த்து வைக்கும் சென்னையை சுற்றியுள்ள பெரும்பாலான ஏரிகள்   மழையின்றி, நீரின்றி  வறண்டுபோய் கிடந்தன. இந்நிலையில் தற்போது பெய்து வரும் இடை விடாத மழையால் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது செம்பரம்பாக்கம். தற்போது ஏரிக்கு வினாடிக்கு 186 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 86 மில்லியன் கன அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 101 கன அடியாக உயர்ந்துள்ளது ஏரியின் நீர்மட்டம் தற்போது 101 மில்லியன் கன அடியாக இருக்கிறது.

[youtube-feed feed=1]