நெல்லை
ஒரே நாளில் நெல்லை காரையார் அணை நீர்மட்டம் 12 அடி உயர்ந்துள்ளது.
கடந்த 3 தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இங்குள்ள அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.
அதன்ப்டி 143 அடி உயரம் கொண்ட காரையார் அணையின் நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி ஒரே நாளில் சுமார் 12 அடி உயர்ந்து 96.8 அடியை எட்டியுள்ளது. இந்த அணைக்கான நீர்வரத்து 3,983 கன அடியாக உள்ளது.
மேலும், 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 96.84 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணைக்கான நீர்வரத்து 4,913 கன அடியாக உள்ளது.
தொடர்ந்து அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருவதால், இரு அணைகளின் நீர்மட்டமும் விரைவில் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது