தண்ணீரின் அவசியம், சேமிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி அமெரிக்க துணை தூதரகம் சார்பில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் இன்று துவக்கப்பட்டது.
அமெரிக்க துணை தூதர் ராபர்ட் பர்கீஸ், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர் .
தண்ணீர் என்பதில் ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடு இல்லாமல் குழாயைத் திறந்தால் அனைவருக்கும் குடிக்க தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று இசைமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
மேலும், தண்ணீர் குறித்த விழிப்புணர்வுக்கான பாடல் ஒன்றை விரைவில் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட உள்ளார்.