டில்லி:
கடந்த 2 நாட்களாக 5 முதல் 6 வயதுள்ள ஒரு பெண் குழந்தைக்கு ஒரு பெண் கணக்கு சொல்லிக் கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வளை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதில் எந்த பெண் 1 முத்ல 10 வரை புது விதமாக நடுவில் இருந்து சொல்லிக் கொடுக்கிறார். அதை அந்த குழந்தை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் போது சிலவற்றை தவறுதலாக கூறுகிறது. இதனால் அந்த பெண் அந்த குழந்தையை கடுமையாக திட்டி, கன்னத்தில் அரைந்தார்.
இதனால் அந்த குழந்தை மிகவும் பயத்துடன் துன்புறுத்தலுக்கு ஆளானது. ஒரு கட்டத்தில் பாடத்தை அன்போடு சொல்லித் தருமாறு அந்த குழந்தை கையெடுத்து கும்பிடுகிறது. அந்த குழந்தை சண்டித்தனம் செய்வதாகவும் தெரியவில்லை.
ஆனால் அந்த முதிர்ச்சியற்ற பெற்றோரால் அந்த குழந்தை மனநிலை பாதிக்கும், வகையிலும் மனநோய்க்கு ஆட்படும் வகையில் செயல்பாடு இருக்கிறது. இது ஒரு கோரமான குழந்தைக்கு எதிரான வன்முறையாகும்.
இந்த குழந்தையின் வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரபல கிரிக்கெட் வீரர் வீராட் கோலி இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ‘‘ இந்த காட்சி அதிர்ச்சி அளிக்கிறது. மற்றொரு கண்ணோட்டத்தில் வருத்தமாகவும் உள்ளது. மிரட்டல் மூலம் ஒரு குழந்தையை படிக்க வைக்க முடியாது. இது காயப்படுத்தும் வகையில் இருக்கிறது’’ என்று விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
இதில் ராபின் உத்தப்பாவும் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘குழந்தைகள் கண்டிப்பாக இது போன்று நடத்தப்படக்கூடாது. இந்த மன நிலையில் இருந்து மாற வேண்டும்’’ என்றார்.
இந்த வீடியோவை உடனடியாக பகிர்ந்த ஷிக்கார் தான் கூறுகையில்,‘‘ இந்த காட்சி என்னை மிகவும் வெறுப்படைய செய்துள்ளது. அந்த பெண், குழந்தையை உணர்வு பூர்வமாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார். வெறும் 5 நம்பர்கள் எண்ணுவதற்கு இப்படி செய்துள்ளார். அதிகாரம் செலுத்தக் கூடிய நபர் மீது எப்படி தங்களது அதிகாரத்தை செலுத்துவார்கள் என்பதற்கு இது உதாரணம்’’ என்றார்.