டோக்கியோ:
ஜப்பானில் 250 ஆண்டுகளுக்கு பின்னர் மவுண்ட் லோ எரிமலை மீண்டும் சீறி வருகிறது. சாம்பலை கக்கி வருகிறது. இதன் காரணமாக இந்த எரிமலை விரைவில் தீப்பிழம்புகளை வெளியேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானின் க்யூஷு தீவுப் பகுதியில், மவுண்ட் கிரிஷ்மா உள்ளது. இதன் ஒரு பகுதியான மவுண்ட் லோவில்கடந்த 2 நாட்களாக எரிமலையிலிருந்து சாம்பல் நிற புகைகளும் சாம்பலும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்த எரிமலை ஏற்கனவே கடந்த 1768 ம் ஆண்டு எரிமலை வெடித்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக எரிமலையை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
250 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெடிக்க தொடங்கி உள்ள இந்த எரிமலை அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எரிமலைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஜப்பானும் ஒன்று. இங்கு 103 எரிமலைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் உள்ள மவுண்ட் ஆன் டேக் வெடிது சிதறியதில் 57 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.