ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது.
இந்த நிலையில் இறுதிசுற்றுக்குள் நுழையும் இரண்டாவது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்றில் குஜராத் லயன்சும், ஐதராபாத் சன் ரைசர்சும் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற வார்னர் தனது அணி முதலில் பந்து வீசும் என்று தெரிவித்தார்.
இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய குஜராத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த வண்ணம் இருந்தது. இந்த போட்டில் மீண்டும் துவக்க மோசமாகவே இருந்தது. திவேதி மற்றும் ரெய்னா சொற்ப ரன்களுக்கு அவுட் செய்யப்பட்டனர். மெக்கல்லம் மற்றும் கார்த்திக் பொறுமையுடன் போட்டிங் செய்து அணி ஸ்கோரை சரி செய்தனர். கார்த்தி ரன் அவுட் ஆக அடுத்து அடுத்து மெக்கல்லம் மற்றும் ஸ்மித் அவுட் ஆனர்கள். இறுதியாக பிஞ்ச, ஜடேஜா மற்றும் பிராவோ உடன் ஜோடியாக 20 ஓவர்கள் 2 ரன்களை குஜராத் லயன்ஸ் அணி சேர்த்தது. பிஞ்ச அடிகபச்சமாக 32 பந்த்கள் எதிர் கொண்டு 50 ரன்கள் எடுத்தார்.
ஐதராபாத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தவான் , ஹென்ரிஹூயிஸ், யுவராஜ் சிங் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட்டுக்கள் ஒருபுறம் வீழ்ந்த வண்ணம் இருந்தாலும் கேப்டன் வார்னர் மட்டும் நிலைத்து நின்று ரன்களை சேர்த்து வந்தார். 35 பந்துகளில் அவர் அரைசதம் கடந்தார். வார்னருக்கு துணையாக பிபுல் சர்மா கடைசி வரை இருந்தார்.
45 ரன்கள் தேவைப்பட்டது கடைசி நான்கு ஓவர்களில். 17-வது மற்றும் 18-வது ஓவரில் 21 ரன்களும் எடுக்கப்பட்டது. இதனால் கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. பிராவோ வீசிய 19-வது ஓவர் ஐதராபாத் அணியின் வெற்றி பெற காரணமாக இருந்தது இந்த ஓவரில் வார்னர் மற்றும் சர்மா 19 ரன்கள் எடுத்தனர். வார்னர் 19.2 ஓவர்களில் பவுண்டரி அடித்து வெற்றியை எட்டினார். ஐதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
58 பந்துகளில் 93 ரன்கள் குவித்த கேப்டன் டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 11 பந்துகளில் 27 ரன்கள் குவித்து பிபுள் சர்மா வெற்றிக்கு உறுதியாக இருந்தார். இந்த வெற்றியின் மூலம் ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் ஐதராபாத் மோதவுள்ளது. இந்த போட்டி வரும் ஞாயிறு பெங்களூர் இல் நடைபெற போகிறது.