டெல்லி:
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியா வில் அனைத்து உள்நாட்டு, சர்வதேச விமான போக்குவரத்து வெற்றிகரமாகவும், பாதுகாப்பாக வும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால், பாகிஸ்தானில் விமான சேவைகள் முடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை கூண்டோடு அழித்தது. இதையடுத்து, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தியாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் விமானங்கள் விரட்டியடிக்கப் பட்டன். போர் பதற்றம் காரணமாக நேற்று காலை ஜம்மு, ஸ்ரீநகர், அமிர்தசரஸ் உள்பட 5 நகரங்களின் விமான நிலையங்கள் மூட உத்தரவிடப்பபட்டது. ஆனால், பின்னர் மாலை விமான நிலையங்கள் வழக்கப்போல் இயக்கவும், விமான சேவைகள் தொடரவும் மத்திய அரசு அனுமதி வழங்கியது.
அதேவேளையில், பாகிஸ்தானிலும், விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், போர் பதற்றத்திற்கிடையிலேயும், இந்திய வான் வெளியில் விமான போக்குவரத்து தொடர்ந்து வருகிறது.
ஆனால் பாகிஸ்தானோ நேற்றைய தினம் நிறுத்தப்பட்ட விமான போக்குவரத்தை இன்னும் தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது.