டெல்லி:
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருவதால், ஜம்மு காஷ்மீர் உள்பட எல்லைப்பபகுதியை ஒட்டிய சில மாநிலங்களில் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் விமானங்கள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் வருவதால் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கிலும், விமானப்படை விமானம் மற்றும் பயணிகள் விமானங்களுக்கு இடையே மோதல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும் ஜம்மு- காஷ்மீர் உள்பட எல்லை பகுதிகளை சேர்ந்த மாநிலங்களின் வானில் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட் டுள்ளது.
அதைத்தொடர்ந்து, சண்டிகர், இமயலை பகுதியில் உள்ள லேக், ஜம்மு காஷ்மீர், _ஸ்ரீநகர், அமிர்தசரஸ் நகர்களில் உள்ள பயணிகள் விமான நிலையங்கள் 3 மாதங்கள் மூடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் இந்திய மற்றும் பாக்கிஸ்தானிய வான்வெளி பகுதியை உபயோகப்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தலாம் சர்வதேச விமான நிறுவனங்களுக்கு, மாற்று வழியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அவசர காலத்தையொட்டி சில இடங்களில் பயணிகள் விமானம் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளார்.
‘ஜம்மு, ஸ்ரீநகர், லே, பதான்கோட் விமான நிலையங்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.