மும்பை: பொருளாதாரத்திற்காக ஊரடங்கை விலக்கி, மக்கள் இறக்க அனுமதிக்க மாட்டேன் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார்.
கட்சியின் நாளிதழான சாம்னாவுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது உத்தவ் தாக்கரே கூறியதாவது: பொருளாதார சரிவை மட்டுமே கருத்தில் கொண்டு, ஊரடங்கை தளர்த்த முடியாது.
படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும். அதற்கான நடவடிக்கை ஒவ்வொரு கட்டமாக நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதாரம்,பொருளாதாரம் இரண்டும் இடையே சமநிலை இருக்க வேண்டும். உலகத்தில சில நாடுகள் ஊரடங்கை தளர்த்தி விட்டு, மீண்டும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து வருகின்றன.
ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கும் என்று நிறைய பேர் அதை எதிர்க்கிறார்கள். ஊரடங்கை முழுமையாக நீக்க தயார் என நான் கூறுகிறேன். அந்த முடிவால் கொரோனா பரவல் அதிகமாகி மக்கள் உயிரிழந்தால், அதற்கு பொறுப்பேற்றுக் கொள்வார்களா?
எங்களுக்கும் பொருளாதாரம் பற்றிய கவலை உள்ளது. மக்கள் என் மீது நம்பிக்கை உள்ளது. எனது வேலையில் நான் நேர்மையாக இருக்கிறேன்.. மும்பை நிர்வாகம் கொரோனா சிறப்பாக கட்டுப்படுத்துகிறது என்றார்.
கொரோனாவால் மகாராஷ்டிரா இந்தியாவின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலமாகும். 3.57 லட்சத்திற்கும் அதிகமான தொற்றுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel