டெல்லி:  திருத்தப்பட்ட வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா  மக்களவையில்  இன்று மீண்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து, பாஜக எம்.பிக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அக்கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வக்ஃப் (திருத்த) மசோதா, 2024, இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க 1995 வக்ஃப் சட்டத்தை திருத்த இந்த மசோதா முயல்கிறது, ஆனால் எதிர்க்கட்சிகள் முழு விவாதத்திற்குப் பிறகு அதற்கு எதிராக வாக்களிக்க திட்டமிட்டுள்ளன.

வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை களைவதற்காக வக்பு சட்டம் 1995-ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. வக்பு சொத்துகளை ஒழுங்குபடுத்துவதற்காக, வக்பு சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார்.

அந்த மசோதா, இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும், வக்பு சொத்துகளை முறைகேடாக அபகரிக்கும் நோக்கம் கொண்டது என்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதனால் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அக்குழு பல்வேறு திருத்தங்களுடன் மசோதாவையும், தனது அறிக்கையையும் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.  வஃபு திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக்குழு, அதன் இறுதி அறிக்கையை ஜனவரி 30ந்தேதி அன்று மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம்  சமர்ப்பித்தது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்  இரண்டாவது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  திருத்தம் செய்யப்பட்ட செய்யப்பட்ட இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு  நிறைவேற்றப்பட உள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 4-ந் தேதியுடன்   முடிவடையும் நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா  இன்று  மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட உள்ளது. இந்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள்  வாக்களிக்க உள்ள நிலையில்,  பாஜக எம்பிக்கள் அனைவரும் நாள் முழுவதும் அவை நடவடிக்கையில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என பா.ஜ.க. கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.