டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் வஃபு வாரிய சட்ட திருத்த மசோதா உள்பட 15 மசோதாக்கல் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இது நாடாளுமன்ற  தொடர் பட்டியலில்  இடம்பெற்றுள்ளதாக தகவ்லகள் வெளியாகி உள்ளது.

அத்துடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 மானியங்களுக்கான முதல் தொகுதி துணை கோரிக்கைகளை (SDG) அமர்வில் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பாண்டின் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடலில் ஒரே நாடு ஒரே தேர்தல், வஃபு வாரிய சட்ட திருத்தம் உள்பட  15 மசோதாக்களை தாக்கல் செய்ய  மோடி தலைமையிலான மத்தியஅரசு  பட்டியலிட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே  நிலுவையில் உள்ள 10 மசோதாக்களுடன் புதிதாக 4 மசோதாக்களை தாக்கல் செய்து  நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே நிலுவையில் உள்ள வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.  கடந்த கூட்டத்தொடரில் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கூட்டுக்குழு ஆலோசனை நடத்தி வரும் 29ம் தேதி தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க உள்ளது.

இதுதவிர பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா, ரயில்வே (திருத்தம்) மசோதா, வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா மற்றும் எண்ணெய் வயல்களின் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) திருத்த மசோதா ஆகியவை வரவிருக்கும் அமர்வில் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

அறிமுகத்திற்காக பட்டியலிடப்பட்டுள்ள மசோதாக்களில் ராஷ்ட்ரிய சஹ்காரி விஸ்வவித்யாலயா மசோதாவும் அடங்கும்.  இந்த மசோதா ராஷ்ட்ரிய சகாரி விஸ்வவித்யாலயாவை நிறுவ முயல்கிறது.

பஞ்சாப் நீதிமன்றங்கள் (திருத்தம்) மசோதா, பஞ்சாப் நீதிமன்றங்கள் சட்டம், 1918ஐ திருத்த முயல்கிறது, இது டெல்லி மாவட்ட நீதிமன்றங் களின் மேல்முறையீட்டு அதிகார வரம்பை தற்போதுள்ள ₹3 லட்சத்தில் இருந்து ₹20 லட்சமாக உயர்த்துவதற்காக நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய பட்டியலிடப்பட்டுள்ளது.

அமர்வில் பட்டியலிடப்பட்டுள்ள பிற சட்டங்களில், வணிகக் கப்பல் மசோதா, இந்தியா ஒரு கட்சியாக இருக்கும் கடல்சார் ஒப்பந்தங்களுக்கு இணங்குவதை உறுதி செய்ய முயல்கிறது.

கடலோர கப்பல் மசோதா, கடலோர வர்த்தகத்தை ஊக்குவிக்க முயல்கிறது.  இந்தியாவின் சர்வதேச கடமைகள் மற்றும் சட்டப்பூர்வமான இணக்கத்திற்கு ஏற்ப துறைமுகங்களின் பாதுகாப்பு, துறைமுகங்களில் பாதுகாப்பு மற்றும் மாசுக்கட்டுப்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பதற் கான நடவடிக்கைகளை இந்திய துறைமுகங்கள் மசோதா வழங்குகிறது.

இத்துடன்,  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 மானியங்களுக்கான முதல் தொகுதி துணை கோரிக்கைகளை (SDG) அமர்வில் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.