டெல்லி: வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்; நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றத்தில், வக்ஃப் திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியதும் அமலுக்கு வர உள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வஃபு மசோதா நிறைவேற்றப்பட்டால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என மிரட்டல் விடுத்தள்ளது.
வக்ஃப் திருத்த மசோதா குறித்து, AIMPLB (All India Muslim Personal Law Board) செய்தித் தொடர்பாளர் டாக்டர் சையத் காசிம் ரசூல் இலியாஸ் கூறுகையில், “இந்த மசோதா பாரபட்ச மானது மற்றும் வகுப்புவாத நோக்கத்துடன் உள்ளது… துரதிர்ஷ்டவசமாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறிய கருத்துகளும் JPC யால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மேலும், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், அதற்கு எதிராக நாடு தழுவிய இயக்கத்தைத் தொடங்குவோம். நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். எங்களுக்குக் கிடைக்கும் அனைத்து சட்ட மற்றும் அரசியலமைப்பு விதிகளையும் நாங்கள் பயன்படுத்துவோம். முன்மொழியப்பட்ட திருத்தங்கள் திரும்பப் பெறப்படும் வரை அமைதியான போராட்டத்தை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளது.
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் இந்த மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.