ஐரோப்பிய கார் பந்தய சீசன் வரவிருக்கும் நிலையில் துபாயில் ஃபெராரி 488 EVO சேலஞ் காரை நடிகர் அஜித் டெஸ்ட் டிரைவ் செய்துள்ளார்.

விடாமுயற்சியுடன் நடிகர் அஜித் மீண்டும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள இருப்பதாக நட்சத்திர கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஐரோப்பிய கார் பந்தய சீசனை ஆவலுடன் எதிர்பார்த்துள்ள நடிகர் அஜித் அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறார்.

துபாயில் உள்ள கார் பந்தய மைதானம் ஒன்றில் ஃபெராரி 488 EVO சேலஞ்சை அவர் ஓட்டிப் பார்த்ததாக அஜித் தரப்பில் இருந்து இன்று அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.

தவிர, அவர் அணியவிருக்கும் ஹெல்மெட்டையும் அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த அறிவிப்பை அடுத்து அஜித் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

[youtube-feed feed=1]