கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் 4வது கட்ட வாக்குப்பபதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 44 தொகுதிகளுக்கு இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
294 தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட மார்ச் 27 ந்தேதி முதுல் ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவு மே 2ம் தேதி வெளியாகிறது. மாநிலத்தில் முதல்கட்டமாக 30 தொகுதிகளுக்கு மார்ச் 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 2வது கட்டமாக 30 தொகுதிகளுக்கு ஏப்ரல் 1ந்தேதியும், 3வது கட்டமாக 31 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6ந்தேதியும் தேர்தல் நடைபெற்றது.
4வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 10ந்தேதி) வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த 44 தொகுதிகளில் 373 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1கோடியே 15 லட்சத்து 81 ஆயிரத்து 22 வாக்காளர்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். இதற்காக 15 ஆயிரத்து 940 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பல வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பதால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 789 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.