சென்னை: திருச்சி, திருப்பூர் மற்றும் குமரி மாவட்டம் உள்பட பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டது. இதனால் மாற்று இயந்திரம் பொருத்தி வாக்குப்பதிவு தொடங்கியது. இதன் காரணமாக வாக்குப்பதிவு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி 42வது வார்டு பார்ப்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 406-வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. காலையிலேயே வாக்களிக்க வந்த பாதுமக்கள், எரிச்சல் அடைந்தனர். அதையடுத்து புதிய இயந்திரம் கொண்டு வரப்பட்டுவாக்குப்பதிவு தொடங்கியது.
திருச்சி மாநகராட்சி 23 வது வார்டுக்குட்பட்ட கலைப் பள்ளி மானிய துவக்கப்பள்ளியில் அமைந்துள்ள 281-வது வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இடைக்கோடு, மார்த்தாண்டம் , தக்கலை உள்ளிட்ட 13 இடங்களில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக வாக்குப்பதிவு தாமதமாக நடைபெற்று வருகிறது.
கடலூர் மாநகராட்சி 5-வது வார்டில் மின்னணு வாக்கு இயந்திரம் பழுதானதால் அரைமணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது. அ
மேலும் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்க தாமதமானது.