சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் வாக்காளர் முகாம்கள் நடைபெறுகிறது. 18வயது நிரம்பியவர்கள், உடனே தங்களது பெயரை வாக்காளர் முகாமில் இணைத்துக்கொள்ள முன்வரும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல்  அடுத்த ஆண்டு (2021)  மே, ஜுன் மாதங்களில் நடைபெற் உள்ள  நிலையில், வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி, திருத்தங்கள் நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழக தேர்தல் ஆணையம் கடந்த 16/11/2020) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, 01-01-2021 அன்று 18வயது பூர்த்தியடையும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம், மேலும்  “வாக்காளர் பட்டியலில் பெயர்கள், விலாசம் மற்றும் விவரங்கள் சேர்ப்பது / நீக்குவது / மாற்றுவது ஆகியவற்றிற்கான படிவங்கள் நியமிக்கப்பட்ட இடங்களில் கிடைக்கும். படிவங்களில் நிரப்பப்பட்டவைகளை அங்கு சமர்ப்பிக்கலாம்”, அதற்காக   நவம்பர் 21 மற்றும் 22, டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் (4 நாட்கள்) நியமிக்கப்பட்ட இடங்களில் (பொதுவாக வாக்குச் சாவடிகள்) சிறப்பு பிரச்சாரங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி,  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல். திருத்தம் செய்தல் மற்றும் நீக்கம் செய்வதற்காக  முதல்கட்டகமாக இன்றும் நாளையும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் பெயரை சேர்க்கவோ, திருத்தம் செய்யவோ விண்ணப்பிக்கலாம். முன்னதாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வைக்கப்பட்டுள்ளது

புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் இருந்தால், உங்கள் வீட்டு அருகில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று உரிய படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். அதேபோல், 12.12.2020, 13.12.2020 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும்.

ஆன்லைன் மூலம் புதிய பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்ய விரும்புவோர் www.nsvp.in என்ற இணையதளம் மூலமும் அதோடு Voters Help line என்ற ஆப் மூலம் உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.