டெல்லி: மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் வயநாடு மக்களவை தொகுதி உள்பட  இடைத்தேர்தல் நடைபெற்ற இடங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலம், வயநாடு உள்பட 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 13 மாநிலங்களில் அடங்கிய 48 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தல்களின் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்று வருகிறது.

காலை 10மணி நிலவரப்படி,  மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலையில் உள்ளதாகவும், ஜார்க்கண்டில்  காங்கிரஸ் கூட்டணி  முன்னிலையிலும் உள்ளது.

வயநாடு மக்களை இடைத்தேர்தலில்,  பிரியங்கா காந்தி முன்னிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதியில் பிரியங்கா காந்தி வத்ரா 108558 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மையான  145 என்ற  இலக்கை கடந்துள்ளது. அங்கு 171 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.  பாஜக 90 இடங்களிலும், சிவசேனா 49 இடங்களிலும், என்சிபி 32 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைமையிலான  மகா விகாஸ் அகாடி கூட்டணி  47 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சிவசேனா (யுபிடி) 18 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், , என்சிபி-எஸ்சிபி 12 இடங்களிலும்,  மற்றவர்கள் மற்றும் சுயேச்சைகள்  18  இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

ஜார்க்ண்ட் மாநிலத்தில்,  மகாகத்பந்தன் கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது.  பெரும்பான்மைக்கு 40 இடங்களை தேவையான நிலையில், 43 இடங்களில்  முன்னிலை பெற்றுள்ளது.  ஜேஎம்எம் 24 இடங்களிலும்,  காங்கிரஸ் 11,  ஆர்ஜேடி 6, சிபிஐ (எம்எல்)(எல்) 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 26   26 இடங்களில் முன்னிலை  பெற்றுள்ளது.  பாஜக 24, AJSUP 1, JDU 1 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.