ஜெர்மனியில் உள்ள வோக்ஸ்வாகன் தொழிற்சாலையில் இருந்து அமெரிக்காவின் டேவிஸ்வில்லே நகருக்கு 4000 சொகுசுக் கப்பலை ஏற்றிச் சென்ற கப்பல் கடந்த வாரம் தீப்பற்றி எரிந்தது.
இதில் கப்பல் முழுமையாக எரிந்து நாசமானது தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மூன்று கால்பந்து மைதானம் அளவுள்ள இந்த கப்பலின் எரிபொருள் நிரப்பும் பகுதிக்கு அருகிலும் தீ பற்றி எரிவதால் கப்பல் எந்த நேரத்தில் வெடித்துச் சிதறும் என்று தெரியாமல் தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், கார்கள், பேட்டரிகள், உதிரி பாகங்கள் என்று கப்பலில் அனுப்பிவைக்கப்பட்ட சுமார் 3300 கோடி ரூபாய் பெறுமானமுள்ள சரக்குகள் அனைத்தும் எரிந்து நாசமானதாக வோக்ஸ்வாகன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் வோக்ஸ்வாகன் நிறுவனத்திற்கு சுமார் 1200 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சேதத்தை மதிப்பீடு செய்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கப்பலில் அனுப்பிவைக்கப்பட்ட வோக்ஸ்வாகன், ஆடி, போர்ஷ், பென்டலே மற்றும் லம்போர்கினி கார்களின் மொத்த சந்தை மதிப்பு மட்டுமே சுமார் 3000 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.