சென்னை: பரம்பரை ஆட்சி, மன்னராட்சி என திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா  கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்து  கட்சி தலைவரான  திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

திமுகவின் வாரிசு அரசியல், ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க மறுப்பது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி விசிக துணைப்பொதுச்செயலாளரும், பிரபல லாட்டரி அதிபர் மருமகனும், தொழிலதிபருமான ஆதவ் அர்ஜுனா கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் வெள்ளப்பாதிப்பில் திமுகஅரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சனம் எசய்த நிலையில்,  அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவிலும்,   மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என திமுகவை மறைமுகமாக விமர்சனம் செய்தார். இது விசிகவின் கூட்டணி கட்சியான திமுகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக திமுக தலைவர்களும் ஆதவ் அர்ஜுனாவை விமர்சனம் செய்து வந்தனர். அதுபோல, திமுக ஆதரவாளர்களான விசிக நிர்வாகிகள் வன்னியரசு உள்பட விசிக எம்.பிக்களும் ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும், கட்சி தலைமைக்கு எதிராக செயல்படுவதால், அவர்மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலர் ஒப்பனாக வலியுறுத்தினார். மேலும், திமுகவில் இருந்தும் ஆதவ் மீது நடவடிக்கை எடுக்க திருமாவுக்கு அழுத்தம் வந்ததாக கூறப்பட்டது. ஆனால், அதை திருமா மறுத்து வந்த நிலையில், இன்றுதிடீரென அவரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார்.

திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து, செயல்பட்டு வந்ததால்,  ஆதவ் அர்ஜுனாமீது ஒழுங்கு நடவடிக்கையாக 6 மாதம் கட்சி பொறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்து திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 

இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

1. கட்சியின் துணை பொதுச் செயலாளர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது  தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது.
2. இது குறித்து கடந்த  07-12-2024 அன்று கட்சியின்  பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.
3. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி  மற்றும்  தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக் கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

4. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு “தவறான முன்மாதிரியாக” அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.
5. இத்தகைய சூழலைக்  கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும்  பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

6. அதன்படி, திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர், விசிக.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

‘பரம்பரை ஆட்சியை ஒழிக்க வேண்டும்’ என்று திமுகவை மறைமுகமாக விமர்சித்த ஆதவ் அர்ஜுனா மீது என்ன நடவடிக்கை? திருமாவளவன் பதில்

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை தேவைகளை தீர்க்கும் பணியில் அரசு இயந்திரம் செயல்படவில்லை! திமுக கூட்டணி கட்சி விமர்சனம்…

அங்கே மணிப்பூர், இங்கே வேங்கை வயல், திருமா மனம் நம்முடன் தான்! அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் பரபரப்பாக பேசிய விஜய்…

விசிக ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு, திமுக எம்.பி. ராஜா, விசிக வன்னியரசு எதிர்ப்பு…