ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் செவலா மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வேஸ்வர் ரெட்டிதான், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய 2 தெலுங்கு மாநிலங்களின் பணக்கார வேட்பாளர்.
இவரது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.895 கோடி என்று தான் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். இவரது பெயரில் ரூ.223 கோடி மதிப்பிலான சொத்து உள்ளதாம்.
இவரது மனைவியும், அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் இணை மேலாண் இயக்குநருமான சங்கீதா ரெட்டி பெயரில் ரூ.613 கோடி மதிப்பிலான சொத்தும், மகன் பெயரில் ரூ.20 கோடி மதிப்பிலான சொத்தும் உள்ளதாம்.
இவ்வளவு சொத்துக்கள் இருந்தும், இவரின் குடும்பத்தினர் யாரும் சொந்தமாக காரோ அல்லது வேறு வாகனமோ வைத்துக்கொள்ளவில்லையாம். கடந்த 2014ம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலுக்கான தனது வேட்புமனுவில், அவரது குடும்ப சொத்து மதிப்பாக ரூ.528 கோடியை குறிப்பிட்டிருந்தார்.
– மதுரை மாயாண்டி