சென்னை
விஷ்வ பரிஷத் முன்னாள் தலைவர் மணியன் அம்பேத்கர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவாளரும், விஷ்வ பரிஷத் இயக்கத்தின் முன்னாள் மாநில தலைவருமான ஆர்பிவிஎஸ் மணியனை இ தனிப்படை காவல்துறையினர் கைதுசெய்தனர்
அவர். ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் அம்பேத்கரைப் பற்றி அவதூறாகப் பேசிய வழக்கில் தி.நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார்.
மணியன் அம்பேத்கரைப் பற்றி அவதூறாக என்ன பேசினார் என்பது பற்றியும், இவர் மீது என்ன வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் தெரியவரவில்லை.
காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டுள்ள ஆர்பிவிஎஸ் மணியனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.