வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால்.
சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார்.
அவரை பிரிந்த பிறகு பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா மீது விஷ்ணு விஷாலுக்கு காதல் ஏற்பட்டு லாக்டவுன் நேரத்தில் மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் விஷ்ணு விஷால்.
சமீபத்தில் திருமண பத்திரிகையை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் விஷ்ணு விஷால்.
இன்று (ஏப்ரல் 22) காலை முதலே இவர்களின் திருமணச் சடங்குகள் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தை ஆட்கொண்டன. தற்போது விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா இருவருமே திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இருவருக்கும் பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா இருவருக்குமே முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.