‘எஃப்.ஐ.ஆர்’ , ‘மோகன் தாஸ்’ , ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ போன்ற அடுத்தடுத்த படங்கள் விஷ்ணுவிஷால் கைவசம் உள்ளது .
தற்போது கொரோன அச்சுறுத்தலால் வெள்ளித்திரை சம்பந்தப்பட்ட எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை.
இருப்பினும் தனது மூன்று படங்களிலும் பணிபுரியும் அனைவருக்குமே தொடர்ச்சியாக சம்பளம் கொடுத்து வருகிறார் விஷ்ணு விஷால்.


இந்தத் தகவலை இயக்குநர் அருண் வைத்தியநாதன் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டார். இதனைத் தொடர்ந்து பலரும் விஷ்ணு விஷாலுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.