
நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் தாண்டி அரசியலிலும் பல சர்ச்சைகளுக்குள்ளானவர் நடிகர் விஷால் .
தயாரிப்பாளர் சங்கப் பதவியை அவரிடமிருந்து பறித்து பாரதிராஜா தலைமையில் ஒரு அணியை அமர வைத்துள்ளது தமிழக அரசு. தற்போது நடந்த நடிகர் சங்கத் தேர்தலிலும் பிரச்சனை நீடிக்கிறது.
தனது நிறுவன ஊழியர்களிடம் பிடித்தம் செய்த வரித்தொகையை வருமான வரித்துறைக்கு விஷால் செலுத்தவில்லை என வருமான வரித்துறை விஷால் மீது வழக்கு தொடர்ந்திருந்தது. சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகாத காரணத்தால் தற்போது சென்னை எழும்பூர் கோர்ட் பிடிவார்ண்ட் பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கில் விரைவில் நடிகர் விஷால் கைது செய்யப்படுவார் எனும் நிலையில் இன்று விஷால் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.
Patrikai.com official YouTube Channel