எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரா நடித்துள்ளார்.

விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது. ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் படப்பிடிப்பைத் தொடங்கி முடித்துவிட்டது படக்குழு.

பிப்ரவரி 19-ம் தேதி சக்ரா வெளியாகும் என சமீபத்தில் செய்திகள் வெளியானது. இதற்கான விநியோகஸ்தர்களை முடிவு செய்யும் பணியில் படக்குழு இறங்கியுள்ளது.

யுவன் இசையில் விஷால் நடிக்கும் சக்ரா பத்தாவது படமாகும்.

தற்போது விஷால் நடித்த சக்ரா படத்தின் ப்ரோமோ காட்சி வெளியானது. சண்டை காட்சிகள் நிறைந்த இந்த ப்ரோமோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அனல் அரசு இந்த சண்டை காட்சியை கோரியோ செய்துள்ளார். ராணுவத்தில் கொடுக்கும் மிகப்பெரிய விருதான அசோக சக்ரா விருதை திருடும் திருடனை, விஷால் எப்படி சமாளிக்கிறார் என்பதே இப்படத்தின் கதையாகும்.