‘சக்ரா’ படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நாயகனாக நடித்து தயாரிக்கவுள்ளார் விஷால் .
தற்போது இந்தப் படத்தின் அறிவிப்பை மோஷன் போஸ்டராக வெளியிட்டுள்ளது படக்குழு. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘விஷால் 31’ என அழைக்கப்பட்டு வருகிறது.
இதற்கு ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளராக யுவன், எடிட்டராக என்.பி.ஸ்ரீகாந்த், கலை இயக்குநராக எஸ்.எஸ்.மூர்த்தி, ஆடை வடிவமைப்பாளராக வாசுகி பாஸ்கர் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.