லண்டன் :

ண்டன் நகரில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள அனைத்து படுக்கைகளும் வேகமாக நிரம்பி வரும் நிலையில், தொற்று நோய் பரவல் 6 சதவீதம் உயர்ந்தாலே ஓரிரு நாட்களில் மருத்துவமனைகளில் இடம் இல்லை என்ற நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், லண்டன் நகர மேயர் சாதிக் கான் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் இல்லை இது ‘மிகப்பெரும் சம்பவமாக’ இருக்கப்போகிறது என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன் தீவிரவாத தாக்குதல் நடந்த போது தான் ‘மிகப்பெரும் சம்பவம்’ என்ற குறியீடு பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 6 ம் தேதி வரை 7034 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதில் 908 பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

ஆம்புலன்ஸ் சேவைக்கு, சாதாரண நாட்களில் சராசரியாக நாளொன்றுக்கு 5500 அழைப்புகள் வரும் நேரத்தில், தற்போது அது 8000 மாக அதிகரித்துள்ளது.

நோயாளிகள் ஆம்புலன்ஸ்-க்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலை தொடர்ந்தால், இன்னும் இரண்டு வாரங்களில் மருத்துவமனைகள் நிரம்பிவிடும் என்றும், பரவல் ஒரு சில சதவீதம் உயரும் பட்சத்தில் ஒரு சில நாட்களிலேயே இட நெருக்கடி ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் லண்டன் நகர மருத்துவ இயக்குனர் டாக்டர் வின் திவாகர் தெரிவித்துள்ளார்.