டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டிநடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளில் விளையாடி வரும் இந்திய வீரர் விராட் கோலி, 9000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் போட்டிகளில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கும், நியூசிலாந்து அணி 402 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இந்திய அணி தற்போது அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளது.
விராட் கோலி 102 பந்துகளில் 70 ரன்களில் ஆட்டமிழந்தார், அதே நேரத்தில் இந்தியா 125 ரன்கள் பின்தங்கியிருந்தது. 3வது நாள் கடைசி பந்தில் விராட் அவுட் ஆனார். மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 231/3 ஆக உயர்ந்து.
இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் விராட் கோலி 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களைக் கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களைக் கடந்த 4-வது வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். அவருக்கு முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் (15,921 ரன்கள்), ராகுல் டிராவிட் (13,265 ரன்கள்) மற்றும் சுனில் கவாஸ்கர் (10,122 ரன்கள்) எடுத்து முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
விராட் கோலி 197 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் கிங் கோஹ்லி 9,000 ரன்களைக் கடந்தார். அவரது பேட்டிங் சராசரி 48க்கு மேல் உள்ளது. அவரது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் ஆட்டமிழக்காத 254 ஆகும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர், 2013 இல், ஜோகன்னஸ்பர்க்கில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக அவரது தொழில் வாழ்க்கையின் முதல் கட்டத்தின் போது வந்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் கோஹ்லி 7 இரட்டைச் சதங்களை அடித்துள்ளார், மார்ச் 2023 இல், அவர் ஆமதாபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டை சதத்தை நெருங்கினார். 8.5 மணி நேரத்திற்கும் மேலாக கிரீஸில் இருந்த அவர் 364 பந்துகளில் 186 ரன்கள் எடுத்தார். சமீபத்தியது 2017 டிசம்பரில் வந்தது. டெல்லி டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிராக கோஹ்லி 287 பந்துகளில் 243 ரன்கள் எடுத்தார்.
அண்மையில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 27,000 ரன்களை நிறைவு செய்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். அவர் 27 ஆயிரம் ரன்களை நிறைவு செய்ய வெறும் 594 இன்னிங்ஸ்கள் மட்டுமே எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதுவரை டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்களான, சச்சின் டெண்டுல்கர் (15,921) ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். ராகுல் டிராவிட் (13,265) 2வது இடத்திலும், சுனில் கவாஸ்கர் (10,122) 3வது இடத்திலும் உள்ளனர். இவர்களக்கு விரோட் கோலி, இந்த மதிப்புமிக்க சாதனையை எட்டிய நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இருப்பினும், எடுக்கப்பட்ட இன்னிங்ஸ் அடிப்படையில் அவர் மிகவும் மெதுவாக உள்ளார். விராட் கோலி இதுவரை 29 சதங்களை அடித்துள்ளார்.