ண்டன்

விராட் கோஹ்லிக்கு அடிப்பட்டுள்ளதால் இங்கிலாந்தில் உள்ள கவுண்டி அணியான சர்ரேவில் அவர் விளையாடுவது சந்தேகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி இங்கிலாந்தில் உள்ள கவுண்டி அணியான சர்ரேவில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  அந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாட வேண்டும் என்னும் எண்ணத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இந்தியா – ஆப்கானிஸ்தான் டெஸ்ட் மேட்ச்களில் அவர் பங்கேற்கவில்லை.    ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் பந்தயத்தை இந்தியாவுடன் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

விராட் கோஹ்லிக்கு தண்டு வட நரம்பில் காயம் ஏற்பட்டுள்ளது.  மருத்துவர்கள் அவருக்கு சவ்வு விலகல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.   அதை விடுத்து அவர் இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றால் காயம் மேலும் தீவிரமாகும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அடுத்த சில மாதங்களில் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.   தற்போது ஓய்வெடுக்கமல் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றால் கோஹ்லியால் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில்  பங்கேற்க முடியாமல் போகலாம்.  ஆகவே அவர் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பை விரைவில் விராட் கோஹ்லி வெளியிடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.