டில்லி,

கிரிக்கெட் வீரர் விராட் கோலி, சாக்ஷி மாலிக், பின்னணி பாடகி அனுராதா பட்வால் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய வர்களுக்கும், சாதனை புரிந்தவர்களுக்கும் பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்படுவதும் வழக்கம்.

இந்நிலையில் டில்லியில், நேற்று  குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருது வழங்கும் விழா நடைபெற்றது.

பத்ம விருதுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்.

பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர்ஜோஷி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோருக்கு பத்மவிபுஷன் விருதுகள் வழங்கப்பட்டது

கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பின்னணி பாடகி அனுராதா பட்வால், சேகர் நாயக், தீபா மாலிக், தீபா கர்மாகர், சாக்ஷி மாலிக், உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருது பெற்றனர்.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.