வாஷிங்டன்

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ரிஹானா பாகிஸ்தான் கொடியை ஏந்தி போஸ் கொடுத்ததாகக் கூறப்படுவதன் உண்மை  புகைப்படம் வெளியாகி உள்ளது.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரும்  விவசாயிகளின் டில்லி போராட்டத்துக்கு உள்நாட்டில் மட்டும் இன்றி வெளிநாட்டிலும் ஆதரவு பெருகி வருகிறது.  அமெரிக்க பாப் ஸ்டார் ரிஹானா இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.   அதையொட்டி இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனவும் இதில் வெளிநாட்டவர் தலையிடக் கூடாது எனவும் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள்: எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரிஹானாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் குவியத் தொடங்கிய நிலையில் ரிஹானா பாகிஸ்தான் கொடியை ஏந்தி போஸ் கொடுக்கும் புகைப்படம் வெளியானது.  இந்த செய்தி டிவிட்டரில் வைரலானது.  அத்துடன் அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளதால் இந்தியாவுக்குள் கலவரத்தை உண்டாக்கும் வகையில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளதாகச் செய்திகள் பரவின.

அதன் பிறகு அந்த புகைப்படம் மார்பிங் செய்யபட்டது என கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலமாகத் தெரிய வந்துள்ளது.  2019 ஆஅம் ஆண்டு பிரிட்டனில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அவர் பார்வையாளராக வந்த போது மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.  அதன் அடிப்படையில் அவர் மேற்கு இந்தியக் கொடியை ஏந்தி போஸ் கொடுத்துள்ளார்.  அந்த புகைப்படம் போட்டோ ஷாப் மூலம் பாகிஸ்தான் கொடியை ஏந்தி உள்ளதாக மாற்றம் செய்யப்பட்டு தற்போது வைரல் ஆக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.