இலங்கையில் வெளிநாட்டவர்களை குறிவைத்து 8 இடங்களில் நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டுத் தாக்குதலில் 215 பேர் உடல்சிதறி பலியானார்கள், 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் சீனா, அமெரிக்கா, மொராக்கா, இங்கிலாந்து, இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக கமல்ஹான் தனது ட்விட்டர் பதிவில் :-

மனிதர்களின் கருத்து மோதல்களுக்கு வன்முறை ஒருபோதும் தீர்வாகாது. இலங்கையில் குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசாங்கம் நீதியை நிலைநாட்டுவதில் துரிதமாகவும் நடுநிலையுடனும் செயல்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.