பெங்களூரு பி.எப்., நிதிக்கு புதிதாக வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு எதிராக ஜவுளி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் கண்ணீர் புகை வீச்சும் நடந்தது. ஆத்திரமுற்ற வன்முறை கும்பல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைத்தது. தொழிலாளர்களுக்கான வைப்பு நிதி வட்டி தொடர்பாக பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ஜவுளி நிறுவனத்தில்சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்ற பேரணி நடந்தது.
FotorCreated
ஓசூர் – பெங்களூரு ரோட்டில் நடந்த இந்த பேராட்டத்தில் போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து வன்முறையாக வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீஸ் ஸ்டேசனுக்கு தீவைத்தனர். பத்திரிகையாளர்களையும் தாக்கினர். இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தொடர்ந்து 5 பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இச்சம்பவத்தினால் ஓசூர் ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை தடுக்க மாநில அரசு தவறி விட்டது என பா.ஜ., குறை கூறியுள்ளது.
பெங்களூர் பற்றி எரிகிறது 15 பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது போலீஸ் நிலையம் தீக்கிரையானது.
இந்த போராட்டம் விளைவு 
pm-modi-inaugurates-46th-indian-labour-conference-14373948395553பி.எப்., பணத்தை எடுப்பது குறித்த புதிய அறிவிக்கை ரத்து செய்யப்படுவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பணடாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.
பி.எப்., பணத்தை தொழிலாளர்கள் மொத்தமாக எடுப்பதற்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதனையடுத்து பெங்களூரு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த வனமுறையை அடுத்து மத்திய அரசு இம்முடிவை அறிவித்துள்ளது. 58 வயது எட்டியவர்கள் மட்டுமே முழு தொகையை பெற முடியும் என்பது புதிய விதிமுறையாக கொண்டு வரப்பட்டது. நாடுமுழுவதும் வன்முறை ஏற்பட்டதை அடுத்து தொழிலாளர் வைப்பு நிதி விவகாரத்தில் பழைய விதிமுறையே அமலில் இருக்கும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.