தியோலி வனைரா

தவி ஆட்சியரை தாக்கியதால் ராஜஸ்தான் மாநிலம்  தியோலி உனைரா சட்டசபை இடைத்தேர்தலில் வன்முறை வெடித்துள்ளது.

நேற்று இடைத் தேர்தல் நடைபெற்ற ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டம், தியோலி-உனைரா சட்டசபை தொகுதிக்குட்பட்ட சம்ரவாடா கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் பொதுமக்கள் சிலர் போராட்டம் நடத்தினர்.  அங்கிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தியோலிக்குப் பதிலாக யூனியாரா தாலுகா அதிகார வரம்பிற்குள் தங்கள் பகுதியைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் சுயேட்சை வேட்பாளரான நரேஷ் மீனாவும் போராட்டத்தில் பங்கேற்று வாக்குப்பதிவு எந்திரத்தில் தனது சின்னம் மங்கலாக தெரியும்படி அமைத்திருப்பதாக குற்றம்சாட்டினார். உதவி ஆட்சியர் அமித் சவுத்ரி, காவல்துறையினருடன் அங்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ய முயன்றார். உதவி ஆட்சியரை வாக்குவாதத்தின்போது, சுயேட்சை வேட்பாளர் நரேஷ் மீனா தாக்கியுள்ளார்.

நேற்று இரவு வேட்பாளர் நரேஷ் மீனாவை கைது செய்ய நடவடிக்கை எடுத்தபோது அவரை கைது செய்ய விடாமல் தடுத்து அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வேட்பாளரை கைது செய்வதில் காவல்துரை உறுதியாக இருந்ததால் காவல்துறையினருக்கும், வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  காவல்துரையினர் மீது வேட்பாளரின் ஆதரவாளர்கள் கற்களை வீசி தாக்கியதுடன், வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இன்று வேட்பாளர் நரேஷ் மீனா இன்று கைது செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள், கிராமத்திற்கு வெளியே உள்ள நெடுஞ்சாலைக்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும்  சாலையின் மத்தியில் விறகு கட்டைகளை அடுக்கி தீ வைத்தனர்.  இதுவரை இந்த வன்முறை தொடர்பாக சுமார் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.