னந்த்

குஜராத் மாநிலத்தில் தலித்துகள் மீது மேல் ஜாதியினரின் வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குஜராத் மாவட்டம் ஆனந்த் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஜெயேஷ் சொலங்கி மற்றும் பிரகாஷ் சோலங்கி.    இருவரும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.   இவர்கள் நவராத்திரி சமயத்தில் குஜராத்தில் நடைபெறும் கர்பா என்னும் நடன நிகழ்ச்சியை பார்த்து வந்துள்ளனர்.   அந்த நிகழ்வு முடிந்ததும் பாத்ரானியா பகுதியை சேர்ந்த ஒரு கோவிலின் அருகில் உள்ள வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தனர்.

அப்போது உயர்சாதியினரான பட்டேல் இனத்தை சேர்ந்த ஒருவர் தலைமையில் ஒரு குழுவினர் அவர்கள் இருவரையும் ஜாதிப் பெயரை சொல்லி திட்டி உள்ளார்கள்.  மேலும் கர்பாவை காண தலித்துகளுக்கு அருகதை இல்லை எனச் சொல்லி இருவரையும் தாக்கி உள்ளார்.  தாக்கும் போது ஜெயேஷின் தலையை சுவற்றில் பலமுறை மோதியதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் பெருக்கெடுத்து வழிந்துள்ளது.  உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்,

வழக்கு பதிவு செய்த போலீசார் அடித்ததாக கூறப்படும் எட்டு பேரையும் கைது செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை அல்ல என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் காந்திநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் மீசை வைத்திருந்த இரு தலித் இளைஞர்கள் ராஜபுத்திர வகுப்பை சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.   ராஜபுத்திரர்கள் மட்டுமே மீசை வைத்துக்கொள்ள உரிமை உள்ளவர்கள் என தாக்கியவர்கள் கூறி உள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் உனா என்னும் நகரத்தில் நான்கு தலித் இளைஞர்கள் தாக்கி கொல்லப்பட்டனர்.

குஜராத்தில் இது போல் தலித்துகளின் மேல் அடிக்கடி தாக்குதல் நடைபெறுவதை சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   இந்தியாவுக்கு சுதந்திரம் வந்தும் இன்னும் குஜராத்துக்கு வரவில்லையா எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.