சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய துணைவேந்தர் ஜெகநாதனே தொடர்ந்து இருப்பதால், அங்கு பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு எதிரான அத்துமீறல்கள் அதிகரித்து வருகிறது. இதனால், அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ஆசிரியர் சங்கம் கடிதம் எழுதி உள்ளது.
சேலம் பல்கலைக்கழக துணைவேந்தராக ஜெகநாதன் இருந்து வருகிறார். இவர்மீது சில ஆசிரியர்கள் குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். மேலும் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதுகுறித்து பேசிய முன்னாள் உயர்கல்வித்துறை பதவி வகித்த அமைச்சர் பொன்முடி, துணை வேந்தருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்காமல் உரிய நடவடிக்கை எடுப்போம் என சட்டப்பேரவையில் தெரிவித்தார். மேலும் ஜெகநாதன்மீது காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டு அவரை தமிழ்நாடு அரசு கைது செய்தது. ஆனால், அவர் நீதிமன்றத்தால் ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். . அதன்படி, ஜெகநாதனின் பதவிக்காலத்தை 2025ம் ஆண்டு மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் துணைவேந்தருக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், அவருக்கு எதிராக ஒரு தரப்பினரும் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகின்றனர். ஜெகநாதன் நேர்மையானவர் என்பதால், முறையாக பணி செய்யாத பேராசிரியர்கள்மீது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பேராசிரியர்களை தூண்டி வேலை நிறுத்தத்துக்கு முயற்சித்தாக பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் பேராசிரியர் பிரேம்குமார் என்பவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, ஒரு குரூப் பேராசிரியர்களுக்கும், துணைவேந்தருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள ஆசிரியர்சங்கம் தமிழக அரசுக்கும் உயர்கல்வித்துறை செயலாளருக்கும் துணைவேந்தர் மீது புகார் கூறி கடிதம் எழுதி வருகிறது. அதன்படி,
ஆசிரியர்களை மரியாதை குறைவாக நடத்துபவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
கல்வியல் துறைக்கு நிரந்தர பட்டியலின பெண் பேராசிரியர் இருக்கும்போது, தற்காலிக ஆசிரியையை துறை தலைவராக நியமித்தது கண்டிக்கதக்கது.
பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் பேராசிரியர் பிரேம்குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக பணியிடை நீக்கத்திலேயே உள்ளார். இது சட்டத்திற்கு புறம்பானதாகும். பல்வேறு சட்டவிதிகள், நீதிமன்ற உத்தரவுகள் இதனை தவறு என தெரிவித்தும் துணை வேந்தர் ஜெகநாதன் இதனை கண்டுகொள்ளாமல் உள்ளார். எனவே அவரை உடனடியாக பணிக்கு திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் பட்டியலின ஆசிரியர், ஆசிரியைகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நியாயமாக கிடைக்க வேண்டிய கோப்புகளை அனுப்பாமல் துணை வேந்தர் ஜெகநாதன் காலம்தாழ்த்தி வருகின்றா. எனவே இது குறித்தும் உடனடியாக ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
உயர்வேதியல் துறையில் கடந்த 2005-ம் ஆண்டு உதவி பேராசிரியையாக சேர்ந்த பட்டியலின பேராசிரியைக்கு இன்று வரை பதவி உயர்வு வழங்காமல் இருப்பதை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
பட்டியலின பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் தொடர்சியாக இழுத்தடிப்பது பட்டியலின பேராசிரியர்களை குறைத்து மதிப்பிடுவது போல் உள்ளது.
எனவே உடனடியாக இந்த விவகாரம் தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.