டெல்லி

ன்று வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.

நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்ததில் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆயினும் போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அரியானா மாநில அரசு வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என அரசு தெரிவித்தது. தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சியினர் வினேஷ் போகத்தை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

அத்துடன் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இன்று, வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

வினேஷ் போகத் காங்கிரசில் இணைவதற்கு முன்னதாக இந்திய ரயில்வேயில் தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்தார்.  நேற்று முன்தினம் டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா சந்தித்து அதன்பின்னர் இருவரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபாலை அவரது இல்லத்தில் சந்தித்தனர்..