சென்னை: ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட வினேஷ் போகத், ஒலிம்பிக் கமிட்டியால்  தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்F பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார். அதில், நீங்கள்  சாம்பியன்களில் ஒரு சாம்பியன், இந்தியாவின் சாம்பியன், இந்தியாவின் பெருமை என புகழாரம் சூட்டியுள்ளார்.

100கிராம் எடை அதிகம் இருந்தாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை, ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது தங்கப்பதக்கம் கனவு வீனானது. ஒலிம்பிக் கமிட்டியின் இந்த அறிவிப்பு இந்திய ரசிகர்களியே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், வினேஷ் போகத்திற்கு, பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் “வினேஷ், நீங்கள் சாம்பியன்களில் ஒரு சாம்பியன்! நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம். இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் விரக்தியின் உணர்வை வார்த்தைகள் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அதே சமயம், நீங்கள் நெகிழ்ச்சித்தன்மையை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதை நான் அறிவேன்.

சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு. வலுவாக திரும்பி வா! நாங்கள் அனைவரும் உங்களுக்காக ஆதராவாக இருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.


ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற மகளிருக்கு 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில், வினேஷ் போகத் அடுத்தடுத்து மூன்று போட்டிகளில், முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம், மல்யுத்த போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். ஆனால், போட்டி நாளான இன்று, அவர் அனுமதிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் கூடுதல் எடை இருப்பதாக கூறி, போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யபப்ட்டுள்ளார். இதன் மூலம், ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வாய்ப்பை வினேஷ் போகத் இழந்துள்ளார்.