ண்டிகர்

பிரபல மல்யுத்த வீராங்கனையும் காங்கிரஸ் வேட்பாளருமான வினேஷ் போகத் சொத்து விவரம் வெளியாகி உள்ளது.

அண்மையில் நடந்து ம்டிந்த பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எனவே அவர் மனமுடைந்து மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

பிறகு வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அடுத்த மாதம் 5-ந்தேதி அரியானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் ஜுலானா தொகுதியில் வினேஷ் போகத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று ஜுலானா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் வேட்புமனு தாக்கல் செய்தார்.  வேட்பு மனுவுடன் அளிக்கப்பட்டுள்ள, அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வினேஷ் அளித்த தகவலில்

“வினேஷ் போகத்துக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள வோல்வோ கார், 12 லட்சம் மதிப்புள்ள ஹூண்டாய் கார், ரூ.17 லட்சம் மதிப்புள்ள டொயட்டா இன்னோவா கார் என 3 கார்கள் உள்ளன. அதில் ஒரு கார் கடன் பெற்று வாங்கி உள்ளார்.

அதற்காக வட்டி செலுத்தி வருகிறார். 2023- 24 நிதியாண்டில் ரூ.13,85,000 வருமானம் வந்துள்ளது. இதற்காக ரூ.1.95 லட்சம் வரி கட்டி உள்ளார்.ரூ. 2 கோடி மதிப்புள்ள அசையா சொத்து உள்ளது”

என்று கூறப்பட்டுள்ளது.