டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
90 தொகுதிகளைளக்கொண்ட ஹரியான மாநில சட்டமன்றதுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அரியானா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி, அங்கு ஆட்சியை கைப்பற்ற காங்கிர1 பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஏற்கனவே மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் 66 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் மல்யுத்த வீரர் வினேஷ் போகத் பெயர் இடம்பெற்றுள்ளது. அதில் ஜுலானா தொகுதியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசில் இணைந்த பஜ்ரங் புனியாவுக்கு விவசாயப்பிரிவு செயல் தலைவர் பொறுப்பு தரப்பட்டுள்ளது. .
காங்கிரசில் இணைந்த சேர்ந்த சில மணி நேரங்களிலேயே மல்யுத்த வீரர்கள், வினேஷ் போகத், அரியான மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதுபோல பஜ்ரங் புனியாவுக்கு விவசாயப்பிரிவு செயல் தலைவர் பொறுப்பு தரப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பாக இந்திய ரெயில்வேயில் தான் வகித்து வந்த பதவியை வினேஷ் போகத், புனியா ஆகியோர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் போட்டி? ராகுல் காந்தி உடன் மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா சந்திப்பு!