முழுமுதல் கடவுளான விநாயகருக்கான விழா நாளை… விநாயகர் சதுர்த்தி. அவரை வணங்க வேண்டிய மந்திரங்களை பார்ப்போமா…
விநாயகர் சகஸ்ரநாமம்:
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
விநாயகர் ஸ்லோகம்:
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
விநாயகர் ஸ்லோகம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
விநாயகர் ஸ்லோகம்:
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
விநாயகர் ஸ்லோகம்:
மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.
விநாயகர் காயத்ரி மந்திரம்:
வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.
விநாயகர் ஸ்லோகம்:
அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.
இந்த மந்திரங்களை தினமும் பயபக்தியோடு உச்சரித்து காரியங்களை துவங்குங்கள்.. எடுத்த காரியம் யாவிலும் வெற்றி அளிப்பார் விநாயகர்.
- லட்சுமி நாராயணன்