பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு பிப்ரவரி 15 முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் நாயகியாக பிரியங்கா மோகன், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

மேலும் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்நிலையில், தற்போது சூர்யாவுக்கு வில்லனாக வினய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

படத்தின் கதைப்படி முக்கியமான வில்லனாக வினய் இருப்பார் எனத் தெரிகிறது. இதர வில்லன்கள் யார் என்பதற்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

 

[youtube-feed feed=1]