கொரோனா அச்சுறுத்தலால் விமல் நாயகனாக நடித்து வந்த ‘படவா’, ‘புரோக்கர்’, ‘மஞ்சள் குடை’, ‘லக்கி’ மற்றும் இயக்குநர் வேலு இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படம் ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகி வரும் ‘குலசாமி’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16-ம் தேதி முதல் தொடங்குகிறது.
முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் அளித்து இந்தப் படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை விஜய் சேதுபதி எழுதியிருக்கிறார்.
விமலுடன் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.