விழுப்புரம்: விக்கிரவாண்டியில் பொதுமக்களை திமுகவினர் அடைத்து வைத்துள்ளதாக பாமக உள்பட எதிர்க்கட்சிகள் அடைத்து வைத்துள்ளதாக பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே ஈரோடு இடைத்தேர்தலின்போது, இதுபோன்ற நடவடிக்கையில் திமுகவினர் ஈடுபட்ட வந்த நிலையில், தற்போது விக்கிரவாண்டி தொகுதியிலும் ஈரோடு பாணி அரங்கேற்றப்பட்டு வருகிறது.
விக்கிரவாண்டி தொகுதியில் சட்டவிரோதமாக பொதுமக்களை திமுக அடைத்து வைத்துள்ளதாக கூறி பாமக எம்எல்ஏ அருள் தலைமையிலான பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போன்று சானிமேடு பகுதியில் திமுகவினருக்கு பாமகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10ந்தேதி நடைபெற உள்ளது.வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதியன்று நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா உள்பட பல்வேறு சிறிய கட்சிகளைச் சேர்ந்த 16 வேட்பாளர்களும், சுயேட்சையாக 40 பேர் என மொத்தம் 56 போட்டியிடுகின்றனர். அங்கு மும்முனை போட்டி நிலவுவதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ளது.
ஏற்கனவே வேட்புமனுதாக்கல்கடந்த ஜூன் 14ஆம் தேதி தொடங்கி 21ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களின் வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று செய்யப்படுகிறது. அங்கு பாமக, திமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதையடுத்து, அங்குள்ள கிராம மக்களை திமுகவினர் பணம் கொடுத்து அழைத்துச்சென்று வேறு பகுதிகளில் தங்க வைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமகா அங்கு பல பகுதிகளில் போக்கு போக்கு நிடித்து வருகிறது.
இதற்கிடையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காணை ஒன்றியத்திலுள்ள கடையம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான அன்புமணி ராமதாஸ் தலைமையில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் அந்த பகுதி மக்கள் பங்கேற்காத வகையில், , திமுகவை சேர்ந்தவர்கள் பணம் கொடுத்து, பொதுமக்கள் அனைவரையும் வேறொரு பகுதிக்கு அழைத்துச் சென்று சட்ட விரோதமாக அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதி மக்களை உடனடியாக கடையம் கிராமத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியும் பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் அருள் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோர், திமுகவை கண்டித்து அரை மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதே போன்று கடையம் பகுதியில் பாமக அன்புமணி ராமதாஸ் வருகைக்கு முன் திமுகவினர் மக்களை பணம் கொடுத்து திமுக கட்சி அலுவலகத்தில் அடைத்து வைத்தாக கூறி பாமகவினரும் திமுகவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ள முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டதையடுத்து இரு தரப்பினரை கலைத்தனர். இதனால் சாணிமேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.